திரு.அனுராக் ஜெயின் அவர்கள், மத்தியப் பிரதேச மாநில நிலையிலான, 1989 தொகுதியை சேர்ந்த, இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப) அதிகாரி ஆவார். இவர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலாளராக உள்ளார். மேலும், இவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இதற்கு முன்பு, இவர் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளராக இருந்தார். மேலும், அந்த பணியின் போது, அவர் பிரதமர் கதி சக்தி-பன்முக இணைப்புக்கான தேசியப் பெருந்திட்டத்தை வழிநடத்தினார். இது, ஏப்ரல் 2023-இல் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதைப் பெற்றது.
இவர், இணைச்செயலாளராக, பிரதமர் அலுவலகத்திலும், இந்திய அரசின் நிதி அமைச்சகத்திலும் பணியாற்றினார். அங்கு, உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க திட்டமான ‘பிரதமர் மக்கள் நிதி திட்டம்’ என்ற, மிக வெற்றிகரமான முன்முயற்சிகளில் ஒன்றை கருத்தாக்கம் செய்து செயல்படுத்திய பெருமை அவருக்கு உண்டு.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 5, 2024