திரு. ராஜேஷ் சதுர்வேதி, IRSEE

திரு.ராஜேஷ் சதுர்வேதி அவர்கள், டெல்லி ஐஐடியில் இளங்கலை தொழில்நுட்ப அறிவியலில் பட்டம் பெற்ற மின் பொறியாளர். மேலும், இவர், இந்திராகாந்தி தேசிய திறந்தவழி பல்கலைக்கழத்தில், மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டையம் பெற்றுள்ளார். ஆற்றல் திறன் பணியகத்தால் சான்றளிக்கப்பட்ட ஆற்றல் தணிக்கையாளர். இந்திய இரயில்வேயில் தனது 33 ஆண்டுகால வாழ்க்கையில், இரயில்வே மின்மயமாக்கல் பணிகள், ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்த மேலாண்மை மற்றும் பிற கட்டுமான நடவடிக்கைகள்/திட்டங்கள், இழுவை விநியோக சொத்துக்களின் பராமரிப்பு, பொது சேவை பணிகள் மற்றும் இரயில் பெட்டி பராமரிப்பு ஆகியவற்றில் பரந்த அனுபவம் கொண்ட, திரு.ராஜேஷ் சதுர்வேதி அவர்கள், அக்டோபர் 2020 முதல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனராக (அமைப்பு மற்றும் செயல்பாடு) பொறுப்பேற்றுள்ளார். மேலும், இவர், மின் சக்தி அமைப்பு, இரயில் பெட்டி, சமிக்ஞை, தொலை தொடர்பு, தானியங்கி கட்டண வசூல் செயல்பாடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 5, 2024