திரு. டி. ஆர்ச்சுனன் அவர்கள், 1989 தொகுதியை சேர்ந்த இந்திய இரயில்வே பொறியாளர்கள் (IRSE) சேவையைச் சேர்ந்தவர் . இந்திய அறிவியல் கழகத்தில் (1988-1990) கட்டமைப்பு பொறியாளர் (M.E) மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிவில் பொறியியல் (B.E) (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். (1984-1988).
சென்னை மெட்ரோவில் திட்ட இயக்குநராக சேருவதற்கு முன்பாக, இவர் இந்திய இரயில்வேயில் சுமார் 20 ஆண்டுகளும், சென்னை மெட்ரோவில் 5 ஆண்டுகள் பிரதிநிதியாகவும், கொச்சி மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இரயில் பாதை பராமரிப்பு, இரயில் பாதை அமைக்கும் பணிகள், மண் சார்ந்த பணிகள், பாலங்கள் கட்டுதல், அகலப்பாதை மாற்றும் பணிகள், பாதை புதுப்பித்தல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் மற்றும் பயணிகள் வசதி பணிகள் ஆகியவற்றில் அவருக்கு பரந்த அனுபவம் உள்ளது.
திரு.அர்ச்சுனன் அவர்கள், ஜூன் 2021 முதல் சென்னை மெட்ரோவின் திட்ட இயக்குநராகவும், இயக்குனர் குழும உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். சென்னை மெட்ரோ முதல் கட்ட விரிவாக்கம் (9 கிமீ) மற்றும் இரண்டாம் கட்டம் (119 கிமீ) உள்ளடக்கிய மொத்தம் 3 வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட 128 நிலையங்கள் தொடர்பான அனைத்து கட்டுமான துறை பணிகளுக்கும் பொறுப்பாளராக உள்ளார். சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டமானது 42 கிமீ சுரங்க வழித்தடத்தையும் மற்றும் 77 கிமீ உயர்த்தப்பட்ட வழித்தடத்தையும் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றான, இந்தத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரு.அர்ச்சுனன் அவர்கள், குஜராத் மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் & பாட்னா மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 5, 2024