திட்ட நிலை

கட்டம் I

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டம் 45.046 கிமீ வலைப்பின்னலை உள்ளடக்கிய,இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது. அதாவது, வழித்தடம் 1 ஆனது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும் (23.085 கி. மீ) வழித்தடம் 2 ஆனது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் (21.961 km) இணைக்கப்பட்டுள்ளது . இந்த முதல் கட்டத்தில் உள்ள 32 நிலையங்களில், 19 சுரங்க நிலையங்களாகவும் (சுமார் 55%), மீதமுள்ள 13 உயர்த்தப்பட்ட நிலையங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்கள் இடையே மாறி பயணம் செய்யும் வசதி ஆலந்தூர்(உயர்த்தப்பட்ட) மற்றும் சென்னை சென்ட்ரல் (சுரங்கம்) நிலையங்களில் உள்ளது.

வணிக செயல்பாடு
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் நிலை 1 ஆனது பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான நிலையங்கள் 29 ஜூன் 2015 அன்று திறக்கப்பட்டது. சின்னமலை முதல் விமான நிலை வரை உள்ள நிலையங்களானது 21 செப்டம்பர் 2016 அன்றும்,பரங்கிமலை நிலையமானது 14 அக்டோபர் 2016 அன்றும் திறக்கப்பட்டது. திருமங்கலம் மெட்ரோ நிலையத்திலிருந்து நேரு பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான முதல் சுரங்க பாதை 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது. எழும்பூர் மெட்ரோ நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரையிலான சுரங்கப் பகுதிகள் ஓராண்டுக்குப் பிறகு 2018 மே 25 அன்று திறக்கப்பட்டது. மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ஆயிரம் விளக்கு முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான நீல வழித்தடத்தின் சுரங்க பாதை 2019 பிப்ரவரி 10 அன்று திறக்கப்பட்டது. சார் தியாகராய கல்லூரி மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான நிலையங்கள் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.

கட்டம் I விரிவாக்கம்
முதற்கட்ட விரிவாக்கமானது, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை சுமார் 9.05 கி. மீ தொலைவை உள்ளடக்கியது. இதில்,7 உயர்த்தப்பட்ட நிலையங்களும், 2 சுரங்க நிலையங்களும் மற்றும் ஒரு உயர்த்தப்பட்ட பணிமனையும் உள்ளது.

இந்திய அரசின் ஒப்புதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு 2016 ஜூன் 15 அன்று ஒப்புதல் அளித்தது.

ஜப்பான் அரசுடன் கடன் ஒப்பந்தம்
இத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட அடிப்படை செலவு சுமார் ரூபாய்.3770/- கோடி (ரூபாய் மூவாயிரத்து எழுநூற்று எழுபது கோடிகள் மட்டுமே) ஆகும். இதில், 57% கடன் தொகையை ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவனம் (JICA) வழங்கியுள்ளது, மீதமுள்ள 43% தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் பங்களித்துள்ளது. இந்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையிலான கடன் ஒப்பந்தம் 2017 மார்ச் 31 அன்று கையெழுத்தானது.

பொது ஆலோசகர்களின் நியமனம்
சென்னை மெட்ரோ இரயில் முதல் கட்ட திட்டப்பணிகளுக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்ட பொது ஆலோசகருக்கே, முதல் கட்ட விரிவாக்க பணிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள்
வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் விவரங்கள் மேலே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

வணிக செயல்பாடு
திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை நிலையம் தவிர, இதர நிலையங்களை உள்ளடக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் முதல் விம்கோநகர் பணிமனை வரையிலான வழித்தடம் 14 பிப்ரவரி 2021 அன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அவற்றுள் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோநகர் பணிமனை மெட்ரோ நிலையங்கள் 13 மார்ச் 2022 அன்று பயன்பாட்டிற்கு வந்தது.


கட்டம் II

இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 நிலையங்களுடன் 118.9 கி. மீ நீளத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று வழித்தடங்களைக் கொண்டுள்ளது (i.e) வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ), வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ), வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ). இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு (கட்டுமானத்தின்போது வட்டி செலவினம் உட்பட) ரூபாய்.63246 கோடி (அறுபத்து மூன்றாயிரத்து இருநூற்று நாற்பத்தாறு கோடி ரூபாய் மட்டுமே) ஆகும். இந்த முன்மொழிவு இந்திய அரசின் செயல்முறை மற்றும் ஒப்புதலின் கீழ் உள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

CorridorsElevated(Km)UG(Km)Total Length(Km)
சி-3 மாதவரம் முதல் சிப்காட் வரை19.126.745.8
சி-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை16.010.126.1
சி-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை41.25.847
மொத்த நீளம்118.9
CorridorsElevatedUGTotal Stations
சி-3 மாதவரம் முதல் சிப்காட் வரை
203050
சி-4 கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை181230
சி-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை41 +1(at Grade)648
மொத்த நிலையங்கள்128
திட்ட மதிப்பீடு மொத்தம் ரூ. 63,246 கோடி (கட்டுமானத்தின்போது வட்டி செலவினம் உட்பட)

கட்டம் II விரிவான திட்ட அறிக்கை – இந்திய அரசின் ஒப்புதல்

  • 50:50 சமமான பங்கு முறையின் கீழ் நிதியளிப்பதற்கும், இருதரப்பு/பலதரப்பு ஏஜென்சிகளிடமிருந்து கடன் உதவிக்கும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
  • இந்த திட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்(இந்திய அரசு), தீவிர பரிசீலனையில் உள்ளது

இரண்டாம் கட்ட நிதி விவரங்கள்

  • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (i.e 52.01 கி.மீ, வழித்தடம் 3 இன் மாதவரம் சோழிங்கநல்லூர் மற்றும் வழித்தடம் 5 இன் மாதவரம் சி. எம். பி. டி) ஆகியவை மாநிலத் துறை திட்டமாக ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவனத்துடன் (JICA) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • நிதியுதவியின் மீதமுள்ள பகுதி (66.89 கி. மீ) : முழு வழித்தடம் -4 மற்றும் வழித்தடம் -3 மற்றும் வழித்தடம் -5 ஆகியவற்றின் மீதமுள்ள பகுதிகளுக்கு, பலதரப்பு வங்கிகளான i.e: ADB, AIIB மற்றும் NDB ஆகியவற்றிலிருந்து நிதியளிப்பதற்கு DEA வின் தேர்வுக்குழு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • பலதரப்பு வங்கிகள் தங்கள் ஆரம்ப கட்டப்பணிகளை நிறைவு செய்துள்ளன. மேலும் எம். டி. பி. களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொது ஆலோசகர்களின் நியமனம்

  • நிப்பான் கோய் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆர்வீ அசோசியேட்ஸ் ஆர்க்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பாலாஜி இரயில்வே சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டமைப்புக்கு சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் 52.01 கிமீ ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவன (JICA)வழித்தடத்திற்க்கான (வழித்தடம்-3 மற்றும் வழித்தடம்-5) பொது ஆலோசனை ஒப்பந்தம் (GC1) வழங்கப்பட்டது.
  • AECOM இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் JV, ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் கோ லிமிடெட் (OCG) & நிப்பான் கோய் கோ லிமிடெட் (NK) ஆகிய நிறுவனங்களுக்கு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள 66.89 கி.மீ (வழித்தடம் -4 , வழித்தடம் -3 இன் பகுதி மற்றும் வழித்தடம் -5) மீதிப் பகுதிக்கான பொது ஆலோசனை ஒப்பந்தம் (GC2) வழங்கப்பட்டுள்ளது .

வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள்:
வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் விவரங்கள் மேலே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

S.NO.விளக்கம்NO. OF PACKAGESAWARDEDBALANCE
1கட்டுமான துறை தொகுப்புகள்20200
2இருப்புப்பாதை தொகுப்புகள்550
3அமைப்புசார்ந்த தொகுப்புகள்361719
614219

திட்ட நிலை:

  • 100% மண் பரிசோதனை முடிவுற்றது
  • விரிவான வடிவமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஜூலை 2018 இல் வழங்கப்பட்டு, முன்கூட்டியே முடிக்கப்படும் நிலையில் உள்ளது.
  • தற்போதைய நிலவரப்படி, 61 தொகுப்புகளில், கட்டுமானம் , அமைப்பு மற்றும் இருப்புப்பாதை உள்ளிட்ட வழித்தடம் 3, வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5 சார்ந்த 42 தொகுப்புகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • மீதமுள்ள ஒப்பந்தபுள்ளிககளுக்கான, இறுதியாக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : August 3, 2024